மாலை மலர் 12.02.2014
ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி சென்னை மாநகராட்சி சார்பில் பல் மருத்துவ முகாம்

சென்னை, பிப்.12 – சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 66-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சிறப்பு பல் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்
என சென்னை மாநகராட்சி அறிவித்திருந்தது.
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 66-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சிறப்பு பல் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்
என சென்னை மாநகராட்சி அறிவித்திருந்தது.
அதன்படி, பல்மருத்துவ தொடக்க முகாம் அண்ணாநகர், கோட்டம் 102-ல்
அமைந்துள்ள டி.பி.சத்திரம் பகுதியில் இன்று (புதன்கிழமை) காலை 8.00 மணியளவில் மேயர் சைதை துரைசாமி
தலைமையில் அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எஸ்.கோகுலஇந்திரா தொடங்கி வைக்க உள்ளார்.
சிறப்பு பல்மருத்துவ முகாம் 5 நாட்கள் (பிப்ரவரி-12, 13, 14, 17 மற்றும் 18) தொடர்ந்து நடைபெற உள்ளது. இம்முகாம்களில்
பல் சம்பந்தப்பட்ட நோய் அறிகுறிகள் உள்ள 6,600 நபர்களுக்கு பல் பரிசோதனையும் தேவைப்படுவோருக்கு உரிய
சிகிச்சைகளும் வழங்கப்படும். மேலும் புகையிலை விழிப்புணர்வு மற்றும் வாய் புற்று நோய் கண்டறிதல் ஆகிய சேவைகளும்
வழங்கப்படும்.