தினமலர் 25.02.2010
ஜெர்மன் பல்கலை மாணவர் மாநகராட்சி செயல்பாடு ஆய்வு
கோவை : கல்வி சுற்றுலா வந்த ஜெர்மன் பல்கலை மாணவர்களுக்கு, கோவை மாநகராட்சி பணிகள் குறித்து ஒரு நாள் பயிற்சியளிக்கப்பட்டது.
ஜெர்மனி நாட்டின் கவுஸ்டனிலுள்ள, “யுனிவர்சிட்டி ஆப் அப்ளைய்டு சயின்ஸ்‘ என்ற பல்கலை பொருளாதாரத்துறையை சேர்ந்த 19 மாணவர்கள், கோவைக்கு கல்வி சுற்றுலா வந்தனர். ஆனைகட்டியிலுள்ள “கார்ல் க்யூபல் இன்ஸ்டியூட்‘ நிறுவனத்திற்கு ஜெர்மன் பல்கலை கழக மாணவர்கள், வந்தனர். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு துறை சார்ந்த விஷயங்களை கற்றறிந்தனர்; கள பயிற்சியும் பெற்றனர். பயிற்சியின்போது, பொதுமக்களின் கல்வி வளர்ச்சி, கல்வியின் நிலை, சமூக நிலை, பொருளாதார மேம்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
கோவை மாநகராட்சியின் நிர்வாக அமைப்பு, பணிகள், அதிலுள்ள துறைகள் குறித்து தெரிந்து கொள்ள கோவை வந்தனர். மாநகராட்சி கமிஷனரை சந்திக்கவும், ஜெர்மனி பல்கலை மாணவ, மாணவியர் வந்தனர். நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா, நிர்வாகம், கவுன்சில் தேர்வு பற்றி விளக்கினார். “கார்ல் கியூபல்‘ நிறுவன மேலாளர் மாலதி, திட்ட இயக்குனர் நாதன் ஆகியோர் பங்கேற்றனர்.