தினமலர் 06.03.2010
டவுன் பஞ்., பகுதியில் வரி செலுத்த வேண்டுகோள்
அரூர்: “அரூர் டவுன் பஞ்சாயத்து பகுதியில் நிலுவையில் உள்ள வரி செலுத்த வேண்டுகோள்‘ விடுக்கப்பட்டுள்ளது.டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் திருஞானம் வெளியிட்ட அறிக்கை: அரூர் டவுன் பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாழும் பொது மக்கள் சொத்து வரி,தொழில் வரி, குடிநீர் கட்டணம், கடை வாடகை ஆகியவற்றை நிலுவையின்றி வசூலிக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். எனவே பொது மக்கள் 2009 மற்றும் 2010ம் ஆண்டுக்கான அனைத்து வரிபாக்கிகளையும் நிலுவையின்றி செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் அலுவலக பணியாளர்கள் ஜப்தி நடவடிக்கையில் ஈடுபடுவார்கள்.அவர்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும