தினமணி 05.09.2013
தினமணி 05.09.2013
டிடிஏ செயல்பாட்டை மேம்படுத்த ஆய்வு
தில்லி வளர்ச்சி ஆணையத்தின் (டிடிஏ) செயல்பாட்டை
மேம்படுத்தும் நோக்கில் ஆய்வு நடத்தப்பட்டு வருவதாக தில்லி பிரதேச துணைநிலை
ஆளுநர் நஜீப் ஜங் தெரிவித்துள்ளார்.
டிடிஐ நிர்வாகத் தலைவராகவும் பொறுப்பு வகிக்கும் துணைநிலை ஆளுநர் நஜீப்
ஜங் இதுகுறித்து செய்தியாளர்களிடம் புதன்கிழமை மேலும் கூறியதாவது:
60 ஆண்டுகளுக்கு முன்பு டிடிஏ உருவாக்கப்பட்டபோது நிறைய
எதிர்பார்ப்புகள் இருந்தன. பல்வேறு நில விவகாரங்களுக்கு டிடிஏ தீர்வு
அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. எனினும், டிடிஏ செயல்பாட்டில் சில
குறைபாடுகள் உள்ளன.
ஒவ்வொரு குடிமகனும் நாடு முழுவதும் சுதந்திரமாகச் சென்று வருவதற்கு
உரிமையளிக்கப்பட்டுள்ளது போல, அனைவருக்கும் பிற வசதிகளை அளிப்பதும் அரசின்
கடைமையாக உள்ளது.
தில்லியின் நொய்டா, குர்கான் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளதால் தில்லி மக்கள்தொகை ஒன்றரை கோடியாக உள்ளது.
டிடிஏ நிறுவனக் கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து, அதன்
செயல்பாட்டை மேம்படுத்தும் நோக்கில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தலைநகரில் வீட்டு வசதி பற்றாக்குறை உள்பட பல்வேறு சவால்களை டிடிஏ
திறம்பட எதிர்கொள்ளலாம் என்பதால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது
என்றார் அவர்.