தினமலர் 25.02.2010
டீ தூள்களில் கலப்படம்: அதிகாரிகள் திடீர் சோதனை
பேரம்பாக்கம்: திருவள்ளூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் டீ தூள் களில் கலப்படம் உள்ளதா என உணவு கலப்படத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை செய்து 30 கிலோ டீ தூள்களை பறிமுதல் செய்தனர். கொஞ்சம் கொஞ்சமாக விஷமாக மாறி, உயிரை பறிக்கும் கலப்பட டீத் தூள் விற்பனை தமிழகம் முழுவதும் அமோகமாக நடந்து வருவதாக தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குனருக்கு தகவல் வந்தது. இவரது ஆணைப்படி திருவள்ளூர் மாவட்ட சுகாதார பணிகள் துறை துணை இயக்குனர் சம்பத் உத்தரவின் பேரில், கடம்பத்தூர் ஒன்றிய பகுதிகளில் உள்ள டீ கடைகள் மற்றும் மளிகை கடைகளில் உணவு கலப் படத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை செய்தனர். இப்பணியில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அருட்செல்வி, ராதிகா தேவி, உணவு ஆய்வாளர்கள் சிவக் குமார், முருகன், பிரபாகரன் மற்றும் சுகாதார ஆய் வாளர்கள் ஈடுபட்டனர்.
பேரம்பாக்கம், கடம்பத் தூர், மணவாளநகர் ஆகிய பகுதிகளில் உள்ள 30க்கும் மேற்பட்ட டீக் கடைகள் மற்றும் மளிகை கடைகளில் கலப்பட டீத்தூள் விற்பனை செய்யப்படுகிறதா என சோதனை செய் தனர். சோதனையில் 30 கிலோ கலப்பட டீத்தூள்களை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதேபோல ஓட்டல்கள், பேக்கரி ஆகியவற்றுக்கும் சென்று உணவு கலப்படத்தை கண்டுபிடித்து சாப்பிடத் தகாத உணவு பொருட்களை அழித் தனர். பல கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப் பட்டது. இதே போல புழல், காரம்பாக்கம், மணலி, காரனோடை ஆகிய பகுதிகளிலும் சோதனை நடத்தப் பட்டது. இச்சோதனை மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடைபெறும்‘ என அதிகாரிகள் தெரிவித் தனர்.