தினமலர் 29.11.2010
டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிரம்
பட்டுக்கோட்டை
: பட்டுக்கோட்டை நகராட்சி பகுதியில் கொசுவினால் பரவும் காய்ச்சலை தடுக்கும் பணிக்காக பட்டுக்கோட்டை நகராட்சி மற்றும் மாவட்ட பொது சுகாதார துறை சார்பில் பட்டுக்கோட்டை நகராட்சி பகுதியில் கொசு தடுப்பு பணிகள் துவங்கப்பட்டது. நகராட்சி சார்பில் 10 களப்பணியாளர்கள், மாவட்ட பொது சுகாதாரத்துறை சார்பாக ஏழு களப்பணியாளர்கள் என மொத்தம் 17 களப்பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பட்டுக்கோட்டை முதுநிலை பூச்சியியல் வல்லுனர்கள் வேலுச்சாமி, உஷா மற்றும் நகராட்சி சுகாதார அலுவலர் பாலசுப்ரமணியன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாம்பன் ஆகியோரால் கொசு ஒழிப்பு பணி குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. கொசு உற்பத்தியாகும் கலன்களை அழித்தல், வீடுவீடாக சென்று சுகாதார கல்வி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பணிகளுடன் முதிர் கொசு அழிப்பு பணிக்காக புகை மருந்து அடித்தல் போன்ற பணிகளை நராட்சி ஆணையாளர் பாலகிருஷ்ணன் கண்டியன் தெரு பகுதியில் துவக்கிவைத்தார்.நகராட்சி கமிஷனர் கூறுகையில், “”கொசு ஒழிப்பு பணிக்காக 17 பணியாளர்கள் தினமும் ஆறு வார்டுகள் வீதம் நகர் முழுவதும் பணியாளர்களை கொண்டு பணி மேற்கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் காய்ச்சலை பரப்பும் ஏ.டி.எஸ்., எ.ஜி.ஏப்.டி., கொசுப்புழு உற்பத்தியாகும் டயர், தேங்காய் சிரட்டை, ஆட்டுக்கல் போன்ற தண்ணீர் தேங்க கூடிய பொருட்களில் தேங்கியுள்ள தண்ணீரை அவ்வப்போது அப்புறப்படுத்திட வேண்டும். “”கீழ் நிலை நீர் தொட்டி, மேல்நிலை நீர்த்தொட்டிகளை வாரம் ஒரு முறை உலர்த்தி காயவைத்து பயன்படுத்த வேண்டும். ஏ.சி., பூச்செடிகளின் தண்ணீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடு தேடி வரும் கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு தருமாறும்,”என்றார்.