தினத்தந்தி 31.07.2013
டேக்வாண்டோ போட்டியில் சாதித்த மாணவர்களுக்கு பரிசுகள் மேயர் விஜிலா சத்யானந்த் வழங்கினார்
நெல்லை மாவட்ட சூப்பர் டேக்வாண்டோ கழகம் சார்பில் 5–வது மாவட்ட
சாம்பியன் கோப்பைக்கான போட்டி நெல்லையில் நடந்தது. நெல்லை மாநகர போலீஸ்
துணை கமிஷனர் ராஜராஜன் தொடங்கி வைத்தார். 285 மாணவ–மாணவிகள் கலந்து
கொண்டனர்.
சாம்பியன் கோப்பைக்கான போட்டி நெல்லையில் நடந்தது. நெல்லை மாநகர போலீஸ்
துணை கமிஷனர் ராஜராஜன் தொடங்கி வைத்தார். 285 மாணவ–மாணவிகள் கலந்து
கொண்டனர்.
ஆண்கள் பிரிவில் 42 புள்ளிகளை பெற்று விக்கிரமசிங்கபுரம்,
பி.எல்.டபிள்யூ.ஏ. மேல்நிலைப்பள்ளி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை
வென்றது. 35 புள்ளிகள் பெற்று இப்பள்ளி பெண்கள் பிரிவிலும் ஒட்டு மொத்த
சாம்பியன் ஆனது.
பரிசளிப்பு விழாவில் நெல்லை மாநகராட்சி மேயர் விஜிலா சத்தியானந்த்
கலந்து கொண்டு, வெற்றி பெற்ற மாணவ–மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
தமிழ்நாடு டேக்வாண்டோ கழக பொதுச்செயலாளர் பி.செல்வமணி, நெல்லை மாவட்ட
சூப்பர் டேக்வாண்டோ கழக தலைவர் பி.திருமலைமுருகன், மாவட்ட விளையாட்டு
அலுவலர் பிராங்க்பால் ஜெயசீலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.