தினகரன் 29.06.2010
தக்கலை டவுன்ஹாலில் நகராட்சி தற்காலிக அலுவலகம்
தக்கலை
, ஜூன் 29: தக்கலை டவுன்ஹாலில் பத்மனாபபுரம் நகராட்சி தற்காலிக அலுவலகம் நேற்று முதல் செயல்பட தொடங்கியது.தக்கலை பேலஸ்ரோட்டில் உள்ள பத்மனாபபுரம் நகராட்சி அலுவலக கட்டிடம் சுமார்
115 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஆபத்தான நிலையில் கட்டிடத்தின் பல பகுதிகள் உள்ளது. எனவே புதிய கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டது. இதன்படி அரசு நிதி 40 லட்சம், நகராட்சி நிதி 10 லட்சம் சேர்த்து 50 லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. புதிய கட்டிடம் கட்டுவதற்காக பழைய கட்டிடம் இடிக்கப்பட உள்ளது. இதையடுத்து அலுவலகம் தற்காலிகமாக பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள டவுன்ஹாலுக்கு மாற்றப்பட்டுள்ளது. நேற்று (28&ம் தேதி) முதல் தற்காலிக அலுவலகம் செயல்பட தொடங்கியது.இது குறித்து நகர்மன்ற தலைவர் ரேவன்கில் கூறும்போது
, நகராட்சி புதிய அலுவலகம் கட்டப்பட உள்ளதால் தற்காலிகமாக டவுன்ஹாலுக்கு மாற்றப்பட்டுள்ளது. நகராட்சி பகுதி மக்கள் தங்களது தேவைகளுக்கு டவுன்ஹாலில் உள்ள அலுவலகத்திற்கு வந்து பயன்பெற்று செல்லலாம். இவ்வாறு தெரிவித்தார்.