தினமணி 11.03.2013
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தியவர்களுக்கு அபராதம்
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தியவர்களுக்கு அபராதம்
கோபியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை பயன்படுத்திய கடைக்காரர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
கோபி நகராட்சியில் 40 மைக்ரானுக்கு குறைவான தடிமன் உள்ள பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில், நகராட்சி ஆணையாளர் ஜான்சன் உத்தரவின்பேரில், சுகாதார அதிகாரி ராம்குமார் தலைமையிலான குழுவினர் ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர்.
கோபியில் தினசரி மார்க்கெட் ரோடு, யாகூப் வீதி, புகழேந்தி வீதி, கடைவீதி மளிகைக் கடைகள் ஆகிய பகுதிகளில் இந்தக் குழுவினர் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். இதில், 50 கிலோ அளவிற்கு பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை பயன்படுத்திய கடைக்காரர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.