தினமணி 10.07.2013
குன்னூரில் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை விற்றவர்களுக்கு செவ்வாய்க்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.
மாவட்டத்தில் பெரும்பாலான கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்
பைகள், டம்ளர்கள், தட்டுகள் விற்கப்பட்டு வருவதால் நிலத்தடி நீர்மட்டம்
வெகுவாக குறைந்து வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திடம்
கவலை தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து கோட்டாட்சியர் ஏ.செல்வராஜ் தலைமையில் அதிகாரிகள்
குழுவினர், அனைத்து வணிக நிறுவனங்களிலும் திடீர் ஆய்வு மேற்கொண்டனர் .
இதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்கப்பட்டு வருவது
கண்டறியப்பட்டது. இவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த கடைகளுக்கு ரூ.11
ஆயிரம் வரை அபராதம் விதித்தனர். மேலும் பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட தடை
செய்யப்பட்ட பொருள்களை விற்பனை செய்தால் கடைகளின் உரிமம் ரத்து
செய்யப்படுவதோடு, கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று அதிகாரிகள்
எச்சரித்துள்ளனர்.
சுகாதார ஆய்வாளர் மால் முருகன், கணேச மூர்த்தி, தண்டபாணி உள்பட பலர்
உடனிருந்தனர்.