மாலை மலர் 07.09.2010
தனியார் நிறுவனங்கள் பொது இடங்களை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்த தடை : ஐகோர்ட்டு உத்தரவு
சென்னை
, செப்.7-சென்னை பாரிமுனையை சேர்ந்த கிருஷ்ணன்மணி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.அதில் அவர் கூறியிருப்பதாவது
:-சென்னையில் இட நெருக்கடி அதிகமாக உள்ளது
. ஆனால் வணிக பகுதிகளில் சாலை ஓரங்களை தனியார் நிறுவனங்கள் ஆக்கிரமித்து அதை வாகன நிறுத்தமாக பயன்படுத்துகின்றனர்.பாரிமுனை கடற்கரை ரெயில் நிலையம் அருகே ஒரு பாங்கி
, ஒரு மத நிறுவனம் ஆகியவை பொது இடத்தை தங்களது வாகன நிறுத்தமாக மாற்றி உள்ளனர். இதேபோல சென்னை முழுவதும் தனியார் நிறுவன ஆக்கிரமிப்பு உள்ளது. இங்கு பொதுமக்கள் வாகனங்களை நிறுத்த அனுமதிப்பது இல்லை.எனவே தனியார் நிறுவனங்கள் பொது இடத்தை தங்களது வாகன நிறுத்தமாக பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்
. இவ்வாறு அவர் கூறியிருந்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் விசாரித்து தீர்ப்பு கூறினார்கள்.அவர்கள் கூறியதாவது
:-தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டப்படி பொது இடங்களில் யார் வேண்டுமானாலும் வாகனங்கள் நிறுத்த உரிமை உண்டு
. இவற்றை தனியார் நிறுவனங்கள் ஆக்கிரமிக்க முடியாது. எனவே தனியார் நிறுவனம் தங்கள் சொந்த வாகன நிறுத்தமாக பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது.இதை மீறுபவர்கள் மீது மாநகராட்சி கமிஷனர்
, போலீஸ் கமிஷனர், போக்குவரத்து கூடுதல் கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் அந்த இடங்கள் மாநகராட்சி விதிகள்படி “பார்க்கிங்” கட்டணம் வசூலித்து கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.