தினகரன் 21.05.2010
தனியார் பராமரிப்பில் புதிய பஸ் ஸ்டாண்ட் மாநகராட்சி கூட்டத்தில் இன்று விவாதம்
கோவை, மே 21:கோவை மாநகராட்சி மன்ற அவசர கூட்டம் இன்று நடக்கிறது. இதில் 7 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட மேட்டுப்பாளையம் ரோடு புதிய பஸ் ஸ்டாண்ட் குறித்த தீர்மானம் இடம் பெறுகிறது. இந்த பஸ் ஸ்டாண்ட்டில் வாகன நிறுத்துமிடம், முதியோர், மாற்று திறனாளிகள் செல்ல தனி பகுதி, பயணிகள் தங்கும் கூடம், ஓய்வெடுக்கும் அறை, குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் அறை, கழிப்பிடம், பஸ்கள் நிறுத்தும் இடம் என 24 பகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த பஸ் ஸ்டாண் ட்டை மாநகராட்சி மூலம் பராமரிக்காமல், தனியார் பங்களிப்புடன் பராமரிக்க திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கவுன்சில் கூட்டத்தில் விவாதம் நடத்திய பின்னர் முடிவெடுக்கப்படும். கோவை மாநகராட்சியில் தெற்கு, மேற்கு, கிழக்கு, வடக்கு மண்டல அலுவலகங்களில் இதுவரை 91 குடிசைப்பகுதிகள் ஆதாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு ள்ளது. மாநகராட்சி நிர்வாகம் கணக்கெடுப்பு நடத்தியதில் 86 குடிசைப்பகுதிகள் அங்கீகார மின்றி இருப்பது தெரியவந்தது. இந்த குடிசை பகுதிகளின் விவரங்கள் மன்ற விவாதத்திற்கு வைக்கப்படும். இந்த குடிசைப்பகுதியில் ஜவகர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்பு திட்டப்பணிகள் நடத்தப்படுமா, அதற்கான வாய்ப்பு குறித்து விவாதிக்கப்படும்.