தினமணி 30.06.2010
தமிழ் வாழ்க‘ மின் ஒளிப்பலகை திறப்பு
ஆம்பூர், ஜூன் 29: ஆம்பூர் நகராட்சி அலுவலக கட்டடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள “தமிழ் வாழ்க‘ எனும் மின் ஒளிப்பலகை திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நிறைவு பெறும் நாளிலிருந்து “தமிழ் வாழ்க‘ எனும் மின் ஒளிப்பலகையை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாக அலுவலக கட்டடங்களின் மீது அமைக்கப்பட வேண்டுமென நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசாணை வெளியிட்டிருந்தது. அதன்பேரில் ஆம்பூர் நகராட்சி அலுவலக கட்டடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள மின் ஒளிப்பலகையை நகர்மன்றத் தலைவர் வாவூர் நஜீர் அஹமத் தலைமை வகித்து திறந்து வைத்தார். நகராட்சி ஆணையர் தா. உதயராணி, பொறியாளர் கு. இளங்குமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.