தினமலர் 14.05.2010
தரமான உணவுப்பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கு
நாமக்கல்: நாமக்கல் நகராட்சி திருமண மண்டபத்தில் தரமான உணவுப்பொருள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் சேகர் தலைமை வகித்து பேசினார். நகராட்சி கமிஷனர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். நகராட்சி துப்புரவு அலுவலர் முகமது மூசா வரவேற்றார்.
கூட்டத்தில் மருத்துவ உடல் நலச்சான்று மற்றும் தொற்று நோய்கள் உணவு விடுதிகள் மற்றும் சிகரெட் புகையிலை தடுப்புச்சட்டம் 2003 தரமற்ற உணவுப்பொருட்கள் கைப்பற்றுதல் சீல் வைத்தல் மற்றும் உணவு கலப்பட தடுப்பு சட்ட உரிமம் லேபில் உணவு மாதிரிகள் எடுத்தல் அக்மார்க் உணவு கலப்பட தடுப்புச்சட்டம் ஆகியவை குறித்து விளக்கப்பட்டது. எர்ணாபுரம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் செந்தில்குமார் சுகாதார பணிகள் தொழில்நுட்ப நேர்முக உதவியாளர் கல்யாணசுந்தரம் பள்ளிபாளையம் நகராட்சி உணவு ஆய்வாளர் முத்துசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.