தினகரன் 22.10.2010
தரைக்கடை வணிக வளாகம் வருவாய் அதிகரிக்க மாநகராட்சி கூட்டத்தில் ஆலோசனை
திருச்சி, அக். 22: தரைக்கடை வணிக வளாகம் அமைத்து மாநகராட்சி வருவாயை அதிகரிக்க வேண்டும் என்று திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. மேயர் சுஜாதா தலைமை வகித்தார். கமிஷனர் பால்சாமி, துணைமேயர் அன்பழகன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் காங்கிரஸ் கவுன்சிலர் ஜவஹர் பேசுகையில், திருச்சி அரசு மருத்துவமனை ரூ.50 கோடியில் தரம் உயர்த்த முயற்சி மேற்கொண்ட அமைச்சர் கே.என்.நேருவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. அதேபோல் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவர் பற்றாக்குறையை தீர்க்க வேண்டும். ஸ்ரீரங்கத்தில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும். ரூ.25 லட்சம் செலவில் பூ மார்க்கெட் அமைக்க வேண்டும் என்றார்.
அதிமுக கவுன்சிலர் இளஞ்சியம் பேசுகையில், எனது வார்டுக்கான இளநிலை பொறியாளரை பணி நிமித்தமாக தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவரை இடமாற்றம் செய்ய வேண்டும். மாநகராட்சி பள்ளியில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்பிலான கட்டிட பொருட்கள் எங்கே என்று தெரிவிக்க வேண்டும் என்றார்.
கோட்ட தலைவர் பாலமுருகன் பேசுகையில், வார்டில் இருந்து எடுத்து செல்லப்படும் பொருட்களின் விபரம் கவுன்சிலர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். மேலும் இந்த இளநிலை பொறியாளருக்கு அதிக பணிச்சுமை இருப்பதால் அவரால் வார்டு பணிகளில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர் கம்ப்யூட்டர் பிரிவில் அனுபவம் கொண்டவராக இருப்பதால் அவரை மைய அலுவலகத்திற்கு மாற்றம் செய்துவிட்டு புதியவரை நியமிக்க வேண்டும் என்றார்.
செயற்பொறியாளர் சந்திரன் பதிலளிக்கையில், தமிழக அரசிடம் இருந்து ரூ.25 கோடி நிதி பெற சம்மந்தப்பட்ட இளநிலை பொறியா ளர் இரவு பகலாக பணிபுரிந் தார். தற்போது 4 இளநிலை தரைக்கடை…பொறியாளர் பணியிடம் காலியாக உள்ளது. அதனால் பணிகளை மீதம் உள்ளவர்கள் மூலம் பிரித்து மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. ஒரு இடத்தில் இருந்து எடுத்து செல்லப்பட்ட பொருட்கள் ஸ்டோர்ஸில் வரவு வைக்கவில்லை என்றால் சம்மந்தப்பட்ட அதிகாரியிடம் இருந்து 2 மடங்கு ரூபாய் வசூல் செய்ய வேண்டும் என்ற விதி உள்ளது. அதனால் வார்டுகளில் இருந்து எடுத்து செல்லப்படும் பொருட்கள் கண்டிப்பாக கணக்கில் வரும் என்றார். கோட்ட தலைவர் அறிவுடைநம்பி பேசுகையில், எனது வார்டில் பள்ளி கட்டும் பணி தாமதமாக கடந்த 2 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைந்து முடிக்க கான்ட்ராக்டரை அதிகாரிகள் வலியுறுத்த வேண்டும் என்றார்.
அதிமுக கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், கருவாடு பேட்டை பகுதியில் பாதாள சாக்கடையில் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது. இதை சீர்செய்ய ரூ. 2 லட்சம் தேவைப்படுகிறது. இதற்கான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றார்.
இ.கம்யூ கவுன்சிலர் ஸ்ரீரா மன் பேசுகையில், மாவட்ட நிர்வாகத்தை போல் என்எஸ்பி ரோடு, நந்திகோயில் தெருக்களிள் பண்டிகை காலங்களில் தரைக்கடை அமைக்க அனு மதி வழங்க வேண்டும். செ ன்னையை போல் தரைக்கடை வணிக வளாகங்கள் அமைத்து மாநகராட்சி வருவாயை அதிகரிக்க வேண்டும் என்றார்.
காங்கிரஸ் கவுன்சிலர் ஹேமா பேசுகையில், எனது வார்டில் பணிபுரியும் மேஸ்திரிகளுக்கு அடிக்கடி மெமோ வழங்குவதால் அவர்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டு பணியில் முழு கவனம் செலு த்த முடியாத நிலை அவர்களு க்கு ஏற்படுகிறது. மத்திய பஸ் நிலையம் பகுதியில் சாலைக ளில் குப்பைகளை கொட்டும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
வெள்ளம் வரும்
அதிமுக கவுன்சிலர் முத்துமாரி தேவி பேசுகையில், எனது வார்டில் உள்ள குறுக்கு சாலைகள் பல ஆண்டுகளாக புதுப்பிக்கபடாமல் உள்ளது. இதை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
உங்களது வார்டு வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதி. வரும் மழை காலத்தில் வெள்ளம் வரும். வந்தவுடன் வெள்ள நிவாரண நிதியை பெற்று சரி செய்யப்படும் என்று மாநகராட்சி கமிஷனர் பால்சாமி கூறினார்.