தினமலர் 11.03.2010
தளி பேரூராட்சியில் தீவிர வரி வசூல்
உடுமலை : “தளி பேரூராட்சி பகுதிகளில், வரி வசூல் தீவிரமாக நடந்து வருகிறது. வரி செலுத்தாவிட்டால், சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,’ என தளி பேரூராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.தளி பேரூராட்சி அதிகாரிகள் கூறியதாவது: திருப்பூர் மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் உத்தரவின் பேரில், வரி வசூலிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரி செலுத்தாதோர் பேரூராட்சியில் வரி செலுத்த வேண்டும். வரி செலுத்த தவறினால், குடிநீர் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது, பேரூராட்சி பகுதியில் வரி வசூலிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. மார்ச் 20ம் தேதிக்குள் பொதுமக்கள் வரி செலுத்த வேண்டும் என பொதுமக்களிடம் அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு தளி பேரூராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.