தினமணி 22.09.2010
தாமரைக்குளத்தில் கொசு மருந்து அடிப்பு
பெரியகுளம், செப். 20: தேனி மாவட்ட ஆட்சியர் ஆணையின் பேரில், பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் பேரூராட்சிப் பகுதியில் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கும் பொருட்டு, கொசு மருந்து அடிக்கும் பணி சனிக்கிழமை நடைபெற்றது (படம்).
இப் பேரூராட்சிப் பகுதியில் உள்ள வீதிகள், சாக்கடைகள் உள்பட 15 வார்டுகளிலும் கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கும் பணி நடைபெற்றது. பேரூராட்சித் தலைவர் வி.அன்பழகன், நிர்வாக அலுவலர் பி.காமாட்சி, சுகாதார ஆய்வாளர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் மேற்பார்வையில் இப் பணி நடைபெற்றது. மேலும், தண்ணீர் தொட்டிகளை மூடிவைக்குமாறும், குடிநீரை காய்ச்சி குடிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.