தினத்தந்தி 13.08.2013
தாரமங்கலத்தில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
தாரமங்கலம் பேரூராட்சி
நிர்வாகம் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இந்த
ஊர்வலத்தை பேரூராட்சி தலைவர் பாலசுந்தரம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
துணைத்தலைவர் தனபால், உறுப்பினர்கள் சீனி, பிரபு, ஜோதிமணி மற்றும் மீசை
கோவிந்தராஜ், குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஊர்வலத்தில்
செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு, மழைநீர் சேகரிப்பு
பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும், மழைநீர்
உயிர்நீர், மழைநீரை சேகரிப்போம்–நீர்வளம் காப்போம் போன்ற வாசங்களை
மாணவர்கள் கையில் ஏந்தியபடி கொண்டு சென்றனர். இந்த விழிப்புணர்வு
ஊர்வலத்திற்கான ஏற்பாடுகளை பேரூராட்சி செயல் அலுவலர் உமாகாந்த்
செய்திருந்தார.