தாரமங்கலம் பேரூராட்சியில் வரிகள் செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
தாரமங்கலம்: தாரமங்கலம் பேரூராட்சி தலைவர் மற்றும் செயல் அலுவலர் கூட்டாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
தாரமங்கலம் தேர்வு நிலை பேரூராட்சியில் குடிநீர், தெருவிளக்குகள் அமைத்தல், சாலை மற்றும் கழிவு நீர் வடிகால்கள் அமைத்தல் போன்ற பணிகளை செய்ய வேண்டி உள்ளது. எனவே, பொதுமக்கள் 31.3.13 முடிய செலுத்த வேண்டிய வீட்டு வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், குத்தகை கட்டணம், உரிம கட்டணம் மற்றும் ஏலத்தொகை ஆகியவற்றை வரும் 15.3.13ம் தேதிக்குள் கட்ட வேண்டும்.
தவறினால் குடிநீர் குழாய் துண்டிக்கப்படும் மற்றும் ஜப்தி நடவடிக்கை உட்பட சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப் படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தலைவர் பாலசுந்தரம், செயல் அலு வலர் பெரியசாமி ஆகி யோர் தெரிவித்துள்ளனர்.