தினகரன் 13.10.2010
தாராபுரம் நகராட்சியில் தெருநாய்களுக்கு கு.க அறுவை சிகிச்சை
தாராபுரம், அக்.13: தாராபுரம் நகராட்சியில் தெரு நாய்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. தாராபுரம் நகராட்சியில் 30 வார்டு உள்ளது. எல்லா வார்டுகளிலும் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து விட்டது. பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரோட்டில் செல்ல பயப்படும் நிலை உருவாகிவிட்டது. நாய்கள் துரத்திக் கடித்ததால் பல பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். நாய்களின் தொல் லைக்கு நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து நகர மன்ற உறுப்பினர்களும் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து நாய்களுக்கு கு.க. அறுவை சிகிச்சை செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இத் திட்டத்தின் கீழ் தெருநாய்களை பிடிப்பது, அவை களை அறுவை சிகிச்சைக்காக கொண்டு செல்ல வும், சிகிச்சைக்கு பிறகு அதே இடத்தில்கொண்டுவந்து விட்டுச் செல்வதற்கான வாகனச் செலவு, அறுவை சிகிச்சைக்கு முன்பு வழங்கப்படும் மயக்க மருந்து, பிறகு அறுவை சிகிச்சை செலவு, சிகிச்சை காலத்தில் அவைகளுக்கு உணவு, தொடர்சிகிச்சை, இதோடு சேர்த்து வெறி தடுப்பு ஊசி இப்படி பல் வேறு செலவினங்களுக்காக ஒரு நாய்க்கு ரூ440
வழங்குகிறது. நகராட்சிக்கு 50 சதவீத தொகை மட்டுமே வழங்கப்படுகிறது. இத் திட்டத்தின் அடிப்படையில் தான் தாரா புரம் நகராட்சியில் கடந்த 2009&ம் ஆண்டு 220 தெரு நாய்களுக்கு குடும்பக்கட்டு பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது 255 தெரு நாய்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப் பட உள்ளது. இதற் காக நேற்று 60 நாய் பிடிக்கப்பட்டது. டாக்டர் ஆனந்த்குமார் மற்றும் தேனியைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் அறுவை சிகிச் சையை மேற்கொண்டனர். இது குறித்து நகராட்சி ஆணையர் துரை கூறியதாவது:நகராட்சி ஆனது 7.2 சதுர கி.மீ பரப்பளவில் உள் ளது. அனைத்து பகுதிகளிலும் தெருவில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து வருகிறோம். இனப்பெருக்கத்தை குறைக்கும் வகையில் அவைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. எனவே வீடுகளில் நாய்களை வளர்ப்பவர்கள் தங்களது நாய்களை தெருவில் விட வேண்டாம். எந்த நேரத்திலும் நாய்களை பிடித்துச் செல்ல ஊழியர்கள் வருவார்கள். பிடித்த நாய்களுக்கு உடனுக்குடன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு விடும். எனவே தங்களது நாய்களை சில தினங்களுக்கு வீட்டிலேயே கட்டிவைத்து வளர்த்து கொள்ள வேண்டும். இவ் வாறு துரை கூறினார்.