தினகரன் 25.08.2010
தாராபுரம் நகராட்சி தேர்வு நிலைக்கு உயரும்
தாராபுரம், ஆக.25: தாராபுரம் நகராட்சி தேர்வு நிலைக்கு உயரும் வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
1916&ம் ஆண்டு கோவை ஜில்லாவோடு இணைந்திருந்த தாராபுரத்தை, ஆங்கிலேயர்கள் நகராட்சியாக நிலை உயர்த்தினர். 7.02 சதுர கி.மீ சுற்றளவு கொண்ட நகராட்சியில் மொத்தம் 30 வார்டு உள்ளது. 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட சிறிய நகரம். விவசாயத்தைத் தவிர பிரதான தொழில் எதுவும் இல்லை.
நகர வளர்ச்சிக்கு நகராட்சியின் பொது நிதியிலிருந்து அதிகம் செலவிடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 96.60 சதவீதம் வரி செலுத்தப்பட்டுள்ளது. நூறு ஆண்டுகளை கடந்த விட்ட இந்த நகராட்சி, இன்னமும் முதல் நிலை நகராட்சிபட்டியலில் தான் இருந்து வருகிறது. இதற்கு பல காரணம் இருந்தாலும், வருவாயை கணக்கிடும் போது, செலவீனம் அதிகமாக இருப்பது முக்கிய காரணம் என்கின்றனர் அதிகாரிகள்.நகராட்சியின் மொத்த வருவாயில் 49 சதவீதத்திற்கும் குறைவாக மட்டுமே செலவு மேற்கொள்ளப்பட வேண்டும். இந்நகராட்சியில் 52 சதவீதத்திற்கும் அதிகமாக நிர்வாக செலவீனம் ஏற்பட்டு வருகிறது. இதனால், நிலை உயர்த்துவதற்கு வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டு வந்துள்ளது. நிலை உயர்த்தப்பட்டால் அரசின் மூலம் அதிக திட்டங்களை பெறமுடியும், நிதி ஆதாரங்கள் கூடுதலாக பெறலாம், வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். தரம் உயர்த்தப்பாடாததால் நகரின் மேம்பாட்டுப்பணிகள் பாதிக்கப்படுவதோடு, காலியாக உள்ள 50 துப்புரவு பணியிடங்களும், 10க்கும் மேற்பட்ட அலுவலக ஊழியர் பணியிடங்களும் நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
செலவினத்தை சரிப்படுத்த கூடுதல் வரி விதிப்பால் மட்டுமே முடியும். இதற்காக அரசு தேவையைகருதி நகராட்சியில் வரியை நிர்ணயம் செய்து கொள்ளலாம் என உத்தரவிட்டது.அதன் அடிப்படையில் குடியிருப்புகளுக்கு 25 சதவீதமும், விற்பனை கூடங்களுக்கு 50 சதவீதமும் கூடுதலாக வரி உயர்த்தப்பட்டு, கடந்த 30.6.2008 அன்று நகரமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின் அடிப்படையில் பொது மக்களிடமிருந்து வரி வசூலிக்கப்பட்டது.
இந்நிலையில் ஒரு சில நகரமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மீண்டும் 27.11.2008 அன்று நடைபெற்ற நகரமன்ற கூட்டத்தில் குடியிருப்புகளுக்கு 15 சதவீதமும், விற்பனைக்கூடத்திற்கு 30 சதவீதமும் வரிவிதிப்பை மாற்றி தீர்மானம் கொண்டுவந்தனர்.இந்நிலையில், ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி வரி வசூல் செய்யப்பட்டதால் நகராட்சி ஆணையம் இத் தீர்மானத்தை நிராகரித்துவிட்டது. முதல் தீர்மானத்தின்படி வசூல் மேற்கொண்டதில், 2008&09ம் ஆண்டு 95 சதவீதத்திற்கும் அதிகமாக வரி வசூல் செய்யப்பட்டது. 30.9.2010 வரை வசூலிக்க வேண்டிய வரி தற்போது 40 சதவீதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும். இன்னும் நாட்கள் குறைவாக இருந்தாலும் 100 சதவீதம் வசூல் ஆகும் என்கிறார் நகராட்சி ஆணையர். முறையான வரி விதிப்பின் மூலம் மட்டுமே நகராட்சியின் வளர்ச்சிப் பணிகளை மேற் கொள்ள முடியும். அதிக வருவாய் இருக்கும் பட்சத்தில் தான் செலவினங்களை ஈடுசெய்து, முதல் நிலையிலிருந்து தேர்வு நிலைக்கு தரம் உயர்த்த முடியும். ஆண்டிற்கு ரூ. 4 கோடி வருவாய் உள்ள நிலையில் தேர்வு நிலையை அடைய முடியாது ரூ.6 கோடி முதல் 10 கோடி வரையில் வருவாய் ஈட்டினால் மட்டுமே தரம் உயர்த்த வாய்ப்புகள் உள்ளது. அந்த அடிப்படையில் வரி மாற்றத்தை ஏற்றுக் கொண்டு வரி செலுத்தப்பட்டு வருகிறது. இது மகிழ்ச்சி அளிக்கிறது. விரைவில் இந் நகராட்சி தேர்வு நிலைக்கு மாறும் வாய்ப்புகள் உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிகாரிகள் தகவல்