தினமலர் 15.06.2010 தார் சாலை அமைக்கும் பணி: நாஜிம் துவக்கி வைத்தார் காரைக்கால் : காரைக்கால் வடக்கு தொகுதியில் 37 லட்சம் ரூபாய் செலவில் தார் சாலை அமைக்கும் பணியை எதிர்க்கட்சி தலைவர் நாஜிம் துவக்கி வைத்தார்.காரைக்கால் நகராட்சி சார்பில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி யிலிருந்து நித்தீஸ்வரம் தெருவில் 8.82 லட்சம் ரூபாய் செலவில் அங்காடி கட்டு தல், ராஜாஜி நகரில் 10.50 லட்சம் ரூபாய் செலவில் புதிய தார் சாலை அமைத்தல், தலத்தெரு பெரிய குளம், சிவன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் 9.60 லட்சம் ரூபாய் செலவில் புதிய தார் சாலை, பிள்ளைத் தெரு சிவன்கோவில் தெரு வில் 8.18 லட்சம் ரூபாய் செலவில் தார் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான பூமி பூஜையை எதிர்க்கட்சி தலைவர் நாஜிம் துவக்கி வைத்தார். நகராட்சி தலைவி பிரபாவதி, ஆணையர் ஜோஸ்பேட்டன், நகராட்சி செயற்பொறி யாளர் ராஜராமன், உதவிப் பொறியாளர் தமிழ்ச்செல்வன், இளநிலைப் பொறியா ளர் ரமேஷ், நகரமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.