தினமலர் 29.10.2010
தார் சாலை கோரிக்கை பேரூராட்சி விளக்கம்
ஊத்துக்கோட்டை : தார்ச்சாலை அமைக்க வேண்டுமென, “தினமலர்‘ நாளிதழில் வெளியான செய்திக்கு, பேரூராட்சி நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.அறிக்கையின் விவரம்:ஊத்துக்கோட்டை பேரூராட்சி அலுவலகம் பின்புறம், தார்ச்சாலை அமைக்க வேண்டுமென,”தினமலர்‘ செய்தி வெளியிட்டுள்ளது. கற்கள் பெயர்ந்து காணப்படும் நிலையில் இருக்கும் இச்சாலையை, 10.75 லட்ச ரூபாய் மதிப்பில், சிமென்ட் சாலை அமைக்க பேரூராட்சி கவுன்சிலர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.விரைவில் டெண்டர் விடப்பட்டு, இதற்கான பணிகள் நடைபெற உள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.