தினமணி 25.06.2013
தினமணி 25.06.2013
திடக்கழிவு மேலாண்மை: உதவி இயக்குநர் ஆய்வு
கும்பகோணம்அருகே தாராசுரம் பேரூராட்சியில்
மேற்கொள்ளப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை உரக்கிடங்கினை பேரூராட்சிகளின்
உதவி இயக்குநர் திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ந. விஸ்வநாதன்
தாராசுரம் பேரூராட்சியில் தாராசுரம் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை
செய்யப்படும் உரக்கிடங்கு மற்றும் உரம் தயாரிக்கப்படுவதை பார்வையிட்டு
ஆய்வு செய்தார். உரக்கிடங்கு மேலும் சிறப்பாக செயல்பட அதிகாரிகளுக்கு
அறிவுரை வழங்கினார்.
மேலும் ரூ. 18.25 லட்சத்தில் பொன்னியம்மன் கோவில் குளம் தூர் வாருவதை
பார்வையிட்டார். நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.12.50லட்சம் மதிப்பீட்டில்
கட்டி முடிக்கப்பட்டுள்ள பொது சுகாதார வளாக கட்டடத்தை ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, குளம் மேம்பாட்டில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய
ஒப்பந்ததாரருக்கு அறிவுரை வழங்கினார். ஆய்வின்போது தாராசுரம் பேரூராட்சி
செயல் அலுவலர் அ. மோகன்தாஸ், இளநிலை பொறியாளர் வெங்கடேசன், பணி ஆய்வாளர்
ஆனந்தக்குமார், துப்புரவு மேற்பார்வையாளர் மற்றும் பணியாளர்கள்
உடனிருந்தனர்.