தினகரன் 14.12.2010
தினகரன் செய்தி எதிரொலி ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நடவடிக்கை
திருப்புத்தூர், டிச. 14: தினகரன் செய்தி எதிரொலியாக திருப்புத்தூர் நகரில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருப்புத்தூர் காந்தி சிலை பகுதியை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தினகரனில் செய்தி வெளியானது. மாவட்ட கலெக்டர் சம்பத் ஆக்கிரமிப்பை அகற்ற பேரூராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.
இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் ஆக்கிரமிப்பு கடைகளின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் கடைகளை உடனே அகற்றுமாறு தெரிவித்துள் ளார்.
பேரூராட்சி தலைவர் சாக்ளா கூறுகையில், “கலெக்டர் உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பேரூராட்சி சார்பில் வசூலிக்கப்படும் வரி வசூல் ஏலம் விடாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.