தினமலர் 30.07.2010
தினமலர் செய்தி எதிரொலி பஸ் ஸ்டாண்ட் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
மதுரை: மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் அருகில் நடைபாதையில் இருந்த ஆக்கிரமிப்புகளை, மாநகராட்சி நேற்று அகற்றியது.யூ.சி., பள்ளியின் எதிர்பகுதியில் உள்ள நடைபாதைகளில் ஆக்கிரமித்து பூக்கடைகள் அமைக்கப் பட்டிருந்தன. இந்த பகுதி வழியாக ஷாப்பிங் காம்ப் ளக்ஸ் செல்லும் வழியும் ஆக்கிரமிக்கப் பட்டிருந்த செய்தி “தினமலர்‘ இதழில் நேற்று வெளியானது.நேற்று காலை 11 மணிக்கு மாநகராட்சி அதிகாரிகள் நடைபாதையில் ஆக்கிரமித்து அமைத் திருந்த பூக்கடைகளை அகற்றினர். இதனால் இப்பகுதியை பொதுமக்கள் இடையூறுகள் இன்றி பயன்படுத்த துவங்கியுள்ளனர்.கண்காணிப்பு அவசியம்: ஒவ்வொரு முறையும் நடைபாதை ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றி சென்றதும், மீண்டும் ஆக்கிரமிப்புகளை துவங்குவது வழக்கம். பெரியார் பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் இது போன்ற ஆக்கிரமிப்புகள் நடைபெறாமல், மாநகராட்சி தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். பஸ் ஸ்டாண்டுகளை சுற்றியுள்ள ஹையத்கான் ரோடு, டி.பி.கே., ரோடு, மேலவெளிவீதி நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, பொதுமக்கள் நடைபாதையை மட்டும் பயன்படுத்தும் நிலையை மாநகராட்சி மற்றும் போக்குவரத்து போலீசார் ஏற்படுத்த வேண்டும்.