தினத்தந்தி 05.08.2013
திமிரி பேரூராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன் எச்சரிக்கை பணிகள்

மாவட்ட கலெக்டர் சங்கர் மற்றும் மண்டல
பேரூராட்சிகள் உதவி இயக்குனர் மலையமான் திருமுடிக்காரி ஆகியோர் உத்தரவின்
பேரில், திமிரி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சல்
தடுப்பு முன்எச்சரிக்கை பணிகளான கொசு மருந்து அடித்தல், அபேட் மருந்து
கரைசல் தெளித்தல், வீடுகள் தோறும் டெங்கு காய்ச்சல் குறித்த துண்டு
பிரசுரங்கள் வழங்குதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த பணிகளுக்கான தொடக்க நிகழ்ச்சிக்கு
பேரூராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி
வைத்தார். அதைத்தொடர்ந்து செயல் அலுவலர் மனோகரன் தலைமையில் சுகாதார
ஆய்வாளர் எஸ்.மணி, செவிலியர்கள், டெங்கு களப்பணியாளர்கள், மகளிர் சுய உதவி
குழுவினர்கள் பேரூராட்சியின் அனைத்து வார்டுகளிலும் கொசு மருந்து அடித்தல்,
துண்டு பிரசுரங்கள் வினியோகித்தல் போன்ற பணிகளை மேற்கொண்டனர். இதில்
பேரூராட்சி துணைத் தலைவர் டி.ஆர்.ஆறுமுகம், பேரூராட்சி உறுப்பினர்கள்,
பணியார்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.