தினத்தந்தி 16.06.2013
திமிரி பேரூராட்சியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
திமிரியில் பேரூராட்சி சார்பில் மழைநீர் சேகரிப்பு மற்றும் கட்டமைப்பு
குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. பள்ளி மாணவ–மாணவிகள்,
ஆசிரியர்கள், தொண்டு நிறுவனத்தினர், பேரூராட்சி உறுப்பினர்கள், அலுவலர்கள்,
பணியாளர்கள் கலந்து கொண்ட இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை திமிரி பேரூராட்சி
மன்ற தலைவர் புவனேஸ்வரி கொடிஅசைத்து தொடங்கி வைத்தார்.
ஊர்வலத்தின் போது மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்த துண்டு
பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. இதில் பேரூராட்சி செயல் அலுவலர் மனோகரன்,
துணை தலைவர் ஆறுமுகம் ஆகியோர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.