தினத்தந்தி 05.07.2013
திருச்சி மாநகரத்தில் மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி கலெக்டர் நேரில் ஆய்வு
மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீமுரளிதரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ரூ.4 லட்சத்தில்…
வடமேற்கு பருவமழை தொடங்க உள்ளதால், திருச்சி மாநகரத்தில் உள்ள மழைநீர்
வடிகால் வாய்க்கால்களை போர்க்கால அடிப்படையில் புல்டோசர்கள் மூலம்
தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. பொன்மலைப்பட்டி மெயின்ரோட்டில் இருந்து
ரெயில்வே மைதானம் வழியாக ஜி கார்னர் வரை செல்லும் வாய்க்கால், ஸ்ரீராம்
நகரிலிருந்து ஜிகார்னர் வரை செல்லும் வாய்க்கால், விமான நிலையம் அருகில்
இருந்து வி.எம்.டி. ரோடு வரை செல்லும் வாய்க்கால், பொன்னேரி
புரத்திலிருந்து முல்லைநகர் வரை செல்லும் வாய்க்கால், கத்தரிக்காய்
வாய்க்கால், சோளம்பாறை, தியாகராயநகர் வாய்க்கால் ஆகிய மாநகராட்சிக்குட்பட்ட
வாய்க்கால்கள் ரூ.4 லட்சத்து 6 ஆயிரம் மதிப்பில் தூர் வாரப்பட்டு
வருகிறது.
கலெக்டர் பார்வையிட்டார்
மேலும், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான உய்யக்கொண்டான் வாய்க்காலில் உள்ள
ஆறுகண் மதகு மற்றும் குடமுருட்டி கால்வாய்களிலும் தூர்வாரும் பணிகள் மிக
துரிதமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகளை நேரில் பார்வையிட்ட மாவட்ட
கலெக்டர் ஜெயஸ்ரீமுரளிதரன், மழைக்காலத்தில் தண்ணீர் தங்குதடையின்றி
செல்லவும், வெள்ள பாதிப்பு ஏற்படா வண்ணம் தடுத்திடவும், கால்வாய்களில் உள்ள
ஆக்கிரமிப்புகளை முற்றிலும் அகற்றிட வேண்டும் எனவும் மாநகராட்சி ஆணையர்
மற்றும் அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்கள்.
இந்த ஆய்வின் போது, மாநகராட்சி ஆணையர் தண்டபாணி, நகரப்பொறியாளர்
சந்திரன், பொதுப்பணித்துறை ஆற்றுப்பாதுகாப்பு கோட்ட செயற்பொறியாளர்
பாலசுப்ரமணியம், செயற்பொறியாளர் அருணாச்சலம், உதவி ஆணையர் தயாநிதி உட்பட
பலர் கலந்து கொண்டனர்.