தினமணி 04.02.2011
திருச்சி மாநகராட்சியில் தீவிர வரி வசூல் முகாம்
இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் த.தி. பால்சாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருச்சி மாநகராட்சி சட்டம் 126-ன்படி ஒவ்வொரு அரையாண்டும் அந்தந்த அரையாண்டுக்கான சொத்துவரியை அரையாண்டு தொடங்கி 15 நாள்களுக்குள் செலுத்த வேண்டும். தண்ணீர் கட்டணத்தை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை செலுத்த வேண்டும்.
பிப்ரவரி மாதம் 28-ம் தேதி வரை நடைபெறும் தீவிர வரி வசூல் முகாமில் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம் மற்றும் தொழில் வரி போன்ற நிலுவையிலுள்ள அனைத்து வரி இனங்களையும், பொன்மலை, கோ-அபிஷேகபுரம், ஸ்ரீரங்கம், அரியமங்கலம் ஆகிய 4 மண்டல அலுவலகங்களில் உள்ள சேவை மையங்களிலோ அல்லது தஞ்சை சாலையிலுள்ள அரியமங்கலம் வார்டு அலுவலகம், சுப்பிரமணியபுரத்திலுள்ள வார்டு அலுவலகம், மேலக் கல்கண்டார்கோட்டை வார்டு அலுவலகம், கேகே நகர் வார்டு அலுவலகம், கள்ளத்தெரு வார்டு அலுவலகம், நந்திகோயில் தெரு வார்டு அலுவலகம், தேவர் ஹால் வளாகத்திலுள்ள வசூல் மையம் ஆகிய இடங்களில் செலுத்தலாம்.
இந்த வசூல் மற்றும் சேவை மையங்கள் பொதுமக்களின் வசதிக்காக சனி, ஞாயிறு உள்ளிட்ட அனைத்து நாள்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.
எனவே, தீவிர வரி வசூல் முனைப்புக் காலமான இந்த மாதம் 28-ம் தேதி வரை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய நிலுவையிலுள்ள வரியினங்கள் மற்றும் நடப்பில் உள்ள வரியினங்களைச் செலுத்தி மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். குடிநீர் குழாய் துண்டிப்பு போன்ற நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும்.