தினத்தந்தி 31.12.2013
திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் கோட்ட கூட்டம்

திருச்சி மாநகராட்சியின் அரியமங்கலம்
கோட்ட கூட்டம் கோட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. கோட்ட தலைவர் சீனிவாசன்
தலைமை தாங்கினார். உதவி ஆணையர் பாஸ்கரன், உதவி செயற்பொறியாளர் கண்ணன்
முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் உறுப்பினர் மகாலட்சுமி மலையப்பன்
பேசுகையில், காளியம்மன் கோவில் அருகில் உள்ள தரைப்பாலம் மிகவும் தாழ்வாக
உள்ளதால் கழிவுநீர் செல்வதில் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது. எனவே அந்த
பாலத்தை உயர்த்தி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
உறுப்பினர்
மண்டி சேகர், தனது வார்டில் பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்ய வேண்டும்
என்றும், உறுப்பினர் அன்புலட்சுமி, தெற்கு உக்கடை பகுதியில் புதிததாக
தார்ச்சாலை அமைக் கவேண்டும் என்றும், உறுப்பினர் ரவிசங்கர் தனது வார்டில்
கட்டி முடிக்கப்பட்ட பள்ளி கட்டிடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்றும் கேட்டுக்கொண்டார்கள்.
பின்னர் தலைவர் சீனிவாசன் பேசுகையில்
“அரியமங்கலம் கோட்டத்தை சேர்ந்த 18 வார்டுகளிலும் ஒரு நாள் விட்டு ஒரு நாள்
கொசு மருந்து அடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நாய்களை பிடிக்கவும் தீவிர
நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். உறுப்பினர்கள் முஸ்தபா, கயல்விழி சேகர்,
லீலாவேலு ஆகியோரும் தங்களது வார்டு பிரச்சினைகள் பற்றி பேசினார்கள்.