மாலை மலர் 17.08.2009
திருச்சி மாநகராட்சி பகுதியில் சாலைகளை மேம்படுத்த புதிய திட்டம் தயாராகிறது : “சர்வே” எடுக்கும் பணி தொடங்கியது
திருச்சி, ஆக.17-
திருச்சி மாநகராட்சியில் தற்போது சுமார் 9 1/2 லட்சம் மக்கள் உள்ளனர். நாளுக்கு நாள் மக்கள் தொகை மற்றும் கட்டிடங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அதற்கேற்ப அடிப்படை வசதிகள் தேவையும் அதிகரித்து வருகிறது. எனவே திருச்சி மாநகராட்சி சார்பில் ரூ.100 கோடியில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தும் திட்டம் மற்றும் ரூ.160 கோடியில் ஒருங்கிணந்த கூட்டு குடிநீர் மேம்பாட்டு திட்டம் போன்ற பணிகள் செய்யப்பட உள்ளன.
இந்த நிலையில் திருச்சி மக்களின் தேவைகளை கண்டறிந்து மேலும் முழு அளவிலான தேவை களை நிறைவேற்றும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. உலக வங்கி உதவியுன் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
குடிநீர் விநியோகம் சுகாதாரம் கழிவுநீர் சுத்திகரிப்பு மழைநீர் வடிகால் சாலைகள் போன்ற வசதிகள் இத்திட்டத்தின் மூலம் மேம்படுத்தப்பட உள்ளன.
இதற்காக தற்போது கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. இந்த பணி முடிந்ததம் திட்டம் தயாரிக்கப்பட்டு நிறைவேற்றப்படும்.
இந்த திட்டம் இந்தியாவில் 25 மாநகரா¢ட்சிகளில் மட்டும் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் திருச்சி மாநகராட்சி இத்திட்டத்துக்காக தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
இத்திட்டம் குறித்து அதிகாரிகள் சவுமியா ஆசிஷ்ராவ், திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்லகிருஷ்ணன் ஆகியோர் மாநகராட்சி மேயர் சுஜாதா கமிஷனர் பால்சாமி ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.