தினமணி 31.05.2013
திருச்செங்கோட்டில் பிறப்புச் சான்றிதழ் முகாம்
திருச்செங்கோட்டில் நடைபெற்ற பிறப்புச் சான்றிதழ் வழங்கும் முகாமில் குழந்தைகளுக்கு பெயருடன் கூடிய பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மே 28, 29 ஆகிய இரு நாள்கள் நடைபெற்ற இந்த முகாமில், திருச்செங்கோடு நகர்மன்றத் தலைவர் பொன். சரஸ்வதி பங்கேற்று நகராட்சிப் பகுதியில் பிறந்த குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ்களை வழங்கினார்.