தினமணி 14.06.2013
தினமணி 14.06.2013
திருச்செந்தூரில் குடிநீர் விநியோகம் பாதிப்பு
திருச்செந்தூரில் குடிநீர்க் குழாய் உடைந்ததால் 2 நாள்கள் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது.
பொன்னன்குறிச்சி கூட்டுக் குடிநீர்த் திட்டக் குழாயில், திருசெந்தூர்
அரசு மருத்துவமனை பின்புறப் பகுதியில் உடைப்பு ஏற்பட்டது. இதேபோல கானம்
குடிநீர்த் திட்டக் குழாய்களிலும் உடைப்பு ஏற்பட்டது.
இதனால் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் திருச்செந்தூரில் குடிநீர்
விநியோகம் பாதிக்கப்பட்டது. வியாழக்கிழமை மாலையில் குடிநீர்க் குழாய்
சீரமைக்கப்பட்டது.