தினகரன் 23.03.2013
திருப்பரங்குன்றம் பகுதியில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு
திருப்பரங்குன்றம் பகுதியில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் நிலவிய குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வும் காணும் வகையில் மூலக் கரை பகுதியில் அமைக்கப்பட்ட பம்பிங் ஸ்டேஷனில் இருந்து தண்ணீர் சப்ளை செய்யும் பணிகள் துவங்கின.
திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள, மதுரை மாநகராட்சியின் 95, 96, 97, 98, 99 ஆகிய ஐந்து வார்டுகளிலும் கடுமையான குடிநீர் பற்றாக்குறை நிலவி யது. மதுரை அரசரடியில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து லாரிகள் மூலம் இந்த பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டது. இதில் வீண் காலதாமதம் ஏற்பட்டதால் பொதுமக்களிடையே அதிருப்தி ஏற்பட்டது.
இதையடுத்து, நிரந்தர தீர்வாக, பசுமலை மூலக் கரை பகுதியில் உள்ள உந்து நிலையம், ரூ.10 லட்சம் செலவில் தற்போது நீரேற்று நிலையமாக (பம்பிங் ஸ்டேஷன்) மாற்றப்பட்டுள்ளது. தென்கால் கண்மாய் மற்றும் மாடக்குளம் கண்மாய்களில் போடப்பட்டிருந்த போர்வெல்கள் சீரமைக்கப்பட்டு, இங்கிருந்து இரு லாரிகள் மூலம் இப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதனால், வீண் தாமதம், அலைச்சல்கள் தவிர்க்கப்படும். இந்த நிகழ்ச்சியை மாநகராட்சி மேயர் ராஜன் செல்லப்பா துவக்கி வைத் தார். மாநகராட்சி கமிஷனர் நந்தகோபால், உதவி இன்ஜினியர்கள் தேவதாஸ், திருஞானம், ஜெயசீலன், குழந்தைவேலு, முருகன் மற்றும் கவுன்சிலர்கள் முத்துக்குமார், ஹமீதா பேகம் அக்பர்அலி, சந்தியா பலராமன், நாகலட்சுமி பாண்டுரங்கன், நிலையூர் முருகன், வக்கீல் ரமேஷ் கலந்து கொண்டனர்.