தினமலர் 20.04.2010
திருப்பூரில் அனைத்துப் பெயர்ப்பலகைகளிலும் கட்டாயம் தமிழ்!: செம்மொழி மாநாட்டை சிறப்பிக்க மாநகராட்சி ஆலோசனை
திருப்பூர்: ”கோவையில் நடக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை சிறப்பிக்கும் விதமாக, அனைத்து அரசு அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்களின் பெயர்ப் பலகையை தமிழில் எழுத, சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மதுரை மாநகராட்சி நிர்வாகமும் இதுகுறித்து ஆலோசித்து வருகிறது. திருப்பூர் மாநகராட்சி யிலும் நடைமுறைப்படுத்தப் படும். வர்த்தக நிறுவனங் களை அழைத்துப் பேசியபின் அமலாகும்,” என மேயர் செல்வராஜ் தெரிவித்துள்ளார். கோவையில் வரும் ஜூன் மாதம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடக்கிறது. செம்மொழி மாநாட்டை ஒட்டி, பல்வேறு அமைப்புகள், அரசுத்துறையினர் தங்களது பங்களிப்பைச் செய்து வருகின்றனர். சென்னை மாநகராட்சி நிர்வாகம், தன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அனைத்து பெயர் பலகைகளும் தமிழில் எழுதப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அரசு அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங் களில் தமிழில் பெயர்ப்பலகை கட்டாயம் என அறிவித்துள்ளது. தேவைப்பட்டால், மற்ற மொழி எழுத்துகளை சிறியதாக எழுதிக் கொள்ளலாம் எனவும் விதிவிலக்கு அளித்துள்ளது. மேலும், அப்படியே ஒலி பெயர்ப்பு (டிரான்ஸ்லிட்ட ரேஷன்) செய்யாமல், மொழி பெயர்ப்பு (டிரான்ஸ்லேஷன்) செய்து மாற்ற வேண்டும்.
தூய தமிழாக இருந்தால் வரவேற்கத்தக்கது. உதாரணமாக, ஸ்டுடியோ என்பதை நிழற்பட நிலையம் அல்லது புகைப்பட நிலையம் என்றும், டெக்ஸ் டைல்ஸ் என்பதை துணியகம் என்றும் மாற்ற வேண்டும். வரும் மே 31ம் தேதிக்குள் அனைத்துப் பெயர் பலகைகளும் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என, சென்னையில் மேயர் சுப்பிர மணியன் அறிவுறுத்தி உள்ளார். சென்னை மாநகராட்சியை பின்பற்றி, மதுரையிலும் இது குறித்து ஆலோசித்து வருகின் றனர். மதுரை மேயர் தேன்மொழி, ”சென்னையைப் போல் மதுரை யிலும் இந்த உத்தரவு பிறப்பிக்கப் படும். மதுரையில் வர்த்தக சங்க பிரதிநிதிகள் கூட்டம் நடத்தப் படும். அடுத்த மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்படும்,” என தெரிவித் துள்ளார். கோவையின் அருகிலுள்ள நகரம் என்ற வகையிலும், கொங்கு மண்டலத்தில் குறிப்பிடத்தக்க நகரம் என்ற வகையிலும் திருப்பூரிலும் இந்த உத்தரவு அமல்படுத்தப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கோவையில் நடக்கும் செம்மொழி மாநாட்டுக்காக, திருப்பூர் வழியாக முக்கிய பிரமுகர்கள் வருவர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகள், ஓட்டல்களின் அறைகள் முன்பதிவு செய்யப் படும். கோவை மாநாட்டுக்கான பணிகள், வசதிகளில் 20 சத வீதமாவது திருப்பூரில் மேற் கொள்ளப்படும். எனவே, திருப் பூர் மாநகராட்சியும் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நட வடிக்கையில் இறங்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது.