தினத்தந்தி 21.10.2013
திருப்பூர், மழைக்கால நோய்களை தடுக்க குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும்

மழைக்கால நோய்களை தடுக்க குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என்று திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் செல்வ ராஜ் தெரிவித்துள்ளார்.
குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும்
பருவமழை தொடங்கி இருப்பதால் டெங்கு, சிக்குன் குனியா, வயிற்றுப்போக்கு
போன்ற நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளன. இதனால், பொதுமக்கள் குடிநீரை நன்கு
கொதிக்க வைத்து ஆறிய பின்பு குடிக்க வேண்டும். பொதுமக்கள் தங்கள் வீட்டின்
சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண் டும்.
சுற்றுப்புறங்களில் கழிவுநீர் மற்றும் மழைநீர் தேங்கா வண்ணம் பராமரிக்க
வேண் டும். வீட்டில் உள்ள மேல் நிலைத்தொட்டி, கீழ்நிலைத் தொட்டி, சிமெண்டு
தொட்டி ஆகியவற்றை அடிக்கடி பிளிச் சிங் பவுடரால் சுத்தம் செய்து நன்றாக
மூடி நீரை சேமித்து வைக்க வேண்டும்.
ஒத்துழைப்பு
காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற நோயின் அறிகுறிகள் தென்பட்டால்
உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று உரிய சிகிச்சை பெற வேண் டும்.
மாநகராட்சி பொதுசுகாதார பணியாளர்கள், வீடுகளில் உள்ள தொட்டிகளில்
கொசுப்புழு உற்பத் தியை கட்டுப்படுத்தும் அபெட் மருந்து தெளிக்கும் பணிக்கு
ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தண்ணீர் தேங்க ஏதுவான தேவையற்ற பழைய
பொருட்களை அப் புறப்படுத்த வேண் டும்.
பழைய உணவு களை உண்பதை தவிர்க்க வேண்டும். நீண்ட நேரம் உணவு களை வெளியே
வைக் கக்கூடாது. நகரில் உள்ள உணவகங்கள், டீக்கடைகள், தொழிற் சாலைகள் நடத்து
பவர்கள் பொது மக்கள் மற்றும் தொழி லாளர்களுக்கு பாது காக்கப்பட்ட சூடான
குடிநீர் மற்றும் உணவு பொருட்களை வழங்க வேண்டும்.
இந்த தகவலை திருப்பூர் மாநகராட்சி ஆணை யாளர் செல்வராஜ் தெரிவித் துள்ளார்.