தினத்தந்தி 17.08.2013
திருப்பூர் மாநகராட்சியில் சுதந்திர தின விழா: மாணவர்களுக்கு மரக்கன்றுகள்
சுதந்திர தின விழா
திருப்பூர் மாநகராட்சி அலு வலகத்தில் சுதந்திர தினவிழா சிறப்பாக
கொண்டாடப்பட் டது. அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மேயர்
ஏ.விசாலாட்சி மாலை அணி வித்து மரியாதை செலுத்தி, தேசிய கொடியை ஏற்றி வைத்
தார்.
விழாவில் கமிஷனர் செல்வ ராஜ், துணை மேயர் குணசேக ரன் ஆகியோர் முன்னிலை
வகித்தனர். விழாவில் மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள், மாநகராட்சி
அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண் டனர்.
இதைத்தொடர்ந்து ஜெய்வா பாய் பள்ளி, பழனியம்மாள் பள்ளி, நஞ்சப்பா பள்ளி,
வி.ஏ.டி. டிரஸ்ட் பள்ளி மாணவ- மாணவிகளின் கலைநிகழ்ச்சி கள் நடந்தது.
பின்னர் நடத் திட்ட உதவிகளையும், மாணவ-மாணவிகளுக்கு மரக்கன்றுகளையும், மாநக
ராட்சி பணியாளர்களுக்கு தனியார் கண் மருத்துவ மனையில் பரிசோதனை செய் யும்
பதிவு அட்டையை யும் மேயர் ஏ.விசாலாட்சி வழங்கி னார்.
அதன்பிறகு பேண்டு வாத்தி யங்கள் முழங்க ஊர்வலமாக சென்று குமரன் நினைவுத்
தூண், குமரன் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
திருப்பூர் ஊராட்சி ஒன்றியம்
திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த விழா வில் ஒன்றிய தலைவர்
சாமி நாதன் தேசிய கொடியை ஏற்றி னார். ஆணையாளர் கே.ஜி.மணிவண்ணன் முன்னிலை
வகித்தார். விழாவில் ஒன்றிய கவுன்சிலர்கள், வட்டார வளர்ச்சி அதிகாரிகள்,
மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதுபோல் போலீஸ் நிலை யங்கள், தீயணைப்பு நிலையங் கள், அரசு அலுவலகங்கள்
மற்றும் பள்ளிகளில் தேசிய கொடி ஏற்றப்பட்டு பொதுமக் களுக்கு இனிப்பு
வழங்கப்பட் டது.
பொது விருந்து
சுதந்திர தினத்தையொட்டி திருப்பூர் ஈஸ்வரன் கோவில் நேற்று மதியம் பொது
விருந்து நடந்தது. துணை மேயர் குண சேகரன் பொதுவிருந்தில் கலந்து கொண்டு
மக்களோடு மக்களாக அமர்ந்து கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் கோவில் செயல்
அதிகாரி (பொறுப்பு) நந்தகுமார், அ.தி.மு.க. நிர்வாகிகள் சடையப் பன்,
மயூரிநாதன், லோகு உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.