தினமணி 07.06.2013
திருவத்திபுரம் நகராட்சியில் ஒட்டுமொத்த சுகாதாரப் பணி
திருவத்திபுரம் நகராட்சி சார்பில் ஒட்டுமொத்த சுகாதாரப் பணி புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
திருவத்திபுரம் நகராட்சி 12-வது வார்டு பகுதியான சமாதியான்குளத் தெரு, அறிஞர் அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் நகராட்சியின் அனைத்து துப்புரவு பணியாளர்களையும் கொண்டு சாலையோரம் இருந்த மண் குவியல்கள், கழிவுநீர் கால்வாயில் போடப்பட்ட குப்பை, தெரு ஓரப்பகுதிகளில் இருந்த முட்செடிகள் ஆகியவற்றை அகற்றி சுத்தப்படுத்தினர்.
இப்பணியினை நகர்மன்றத் தலைவர் பாவை ரவிச்சந்திரன், நகர்மன்ற உறுப்பினர் பவானி அண்ணாதுரை ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். நகராட்சி ஆணையர் (பொறுப்பு) பி.கே.ரமேஷ், துப்புரவு ஆய்வாளர் கே.மதனராசன் ஆகியோர் மேற்பார்வைட்டனர்.