தினமணி 29.11.2013
திருவள்ளுவர் பல்கலை. கல்விக் குழு உறுப்பினராக வேலூர் மேயர் நியமனம்
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கல்விக் குழு உறுப்பினராக வேலூர் மாநகராட்சி மேயர் பி.கார்த்தியாயினி நியமிக்கப்பட்டுள்ளார்.
பல்கலைக்கழகத்தின் இணைவேந்தரும், உயர் கல்வித் துறை அமைச்சருமான
பி.பழனியப்பன் பரிந்துரையின் பேரில், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின்
கல்விக் குழு உறுப்பினர்களாக வேலூர் மாநகராட்சி மேயர் பி.கார்த்தியாயினி
மற்றும் விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரிச் செயலர்
எஸ்.செந்தில்குமார் ஆகியோரை அரசு நியமித்துள்ளது.
இவர்களின் பதவிக் காலம் 3 ஆண்டுகள். இவர்கள் இருவரின் நியமனத்தை அடுத்து
பல்கலைக்கழகத்தின் கல்விக் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 65-ஆக உள்ளது
என்று பல்கலைக்கழகத் துணைவேந்தர் பி.குணசேகரன் தெரிவித்தார்.