தினமணி 26.08.2013
தினமணி 26.08.2013
திருவள்ளூர் நகர வளர்ச்சிக் குழு தொடக்கம்
திருவள்ளூர் நகர வளர்ச்சிக் குழுவின் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவள்ளூர் நகரை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் வகையில் நகர
வளர்ச்சிக் குழு அமைக்க வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர்
பி.வி.ரமணா தலைமையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆலோசனைகள்
நடத்தப்பட்டன.
இந்நிலையில், குழுவுக்குத் தேவையான அனைத்து வடிவங்களும் நிறைவு
செய்யப்பட்டு ஞாயிற்றுக்கிழமை திருவள்ளூர் நகர வளர்ச்சிக் குழு தொடக்க விழா
நடைபெற்றது.
விழாவுக்கு அமைச்சர் பி.வி.ரமணா தலைமை வகித்து குழுவிற்கு முதல் நிதியாக ரூ.10 லட்சத்தை அமைச்சர் வழங்கினார்.
இக்குழுவிற்கு ஆண்டுச் சந்தாவாக ரூ.1,000, உறுப்பினர் புதுப்பிப்புக் கட்டணமாக ரூ. 200 என நிர்ணயம் செய்யப்பட்டது.
மொத்தமாக ஆண்டுச் சந்தா கட்டணம் ரூ.10 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டது.
குழுவில் பங்கேற்ற ஏராளமானோர் ஆண்டுச் சந்தா ரூ.10 ஆயிரத்தை வழங்கினர்.
மேலும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் தங்களது பங்களிப்பாக ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை நிதி வழங்கினர்.
குழுவின் பணிகள்
இக்குழுவின் மூலம் நகரில் உள்ள சாலைகள், தெரு விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படும்.
மேலும் நகருக்கு தேவையான வசதிகள் குறித்து பொதுமக்களின் ஆலோசனைகளும் ஆலோசிக்கப்பட்டு நிறைவேற்றப்படும்.
இந்த திட்டம் நகரில் சீராக நடைமுறைப்படுத்தப்பட்டால், தொடர்ந்து ஒன்றிய
அளவிலும் இதுபோன்ற வளர்ச்சிக் குழுக்கள் ஏற்படுத்தப்படும் என அமைச்சர்
பி.வி.ரமணா தெரிவித்தார்.
திருவள்ளூர் நகரத் தலைவர் ஏ.பாஸ்கரன், நகராட்சி ஆணையர் அட்சயா, நகராட்சிப் பொறியாளர் பாபு மற்றும் அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
முன்னதாக, அம்மா ராவல் சாரிட்டி டிரஸ்ட் சார்பில் திருவள்ளூர்
நகராட்சிக்கு குளிர்சாதன சவப்பெட்டியுடன் கூடிய வாகனத்தை அமைச்சர்
பி.வி.ரமணா வழங்கினார்.