தினமணி 30.08.2010
திறன் வளர்ப்புப் பயிற்சி
சிங்கம்புணரி, ஆக. 29: சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பேரூராட்சி அலுவலகத்தில் திறன் வளர்ப்பு பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.
நகர்ப்புற கொள்கை ஜெயந்தி சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலம் நகர்ப்புற சுய உதவிக் குழுக்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சிகளான ஜேசிபி ஆப்ரேட்டர், செல்போன் சர்வீஸ், பேஷன் டிசைன், கம்ப்யூட்டர் ஹார்டுவேர் பயிற்சிகள் 30 நாள்கள் நடைபெற்றன. இதில் பெண்களுக்கு தையல், எம்ப்ராய்டிங் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் பேரூராட்சித் துணைத் தலைவர் முத்து முகமது, செயல் அலுவலர் மங்களேஸ்வரன் ஆகியோர் பயிற்சிபெற்ற சுய உதவிக் குழுப் பெண்களுக்கு சான்றிதழ்களை வழங்கினர். ஏற்பாடுகளை சிவகங்கை வீனஸ் இண்டஸ்ட்ரீஸ் இயக்குநர் பூமிநாதன், ட்ரூபா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமரேசன் ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில், திமுக மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் கபிலன், பேரூராட்சி கவுன்சிலர் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.