தினகரன் 14.06.2010
தி.மலை நகராட்சியில் சுவர்ண ஜெயந்தி திட்ட ஒருங்கிணைப்பு கூட்டம்தி.மலை, ஜூன் 14: திருவண்ணாமலை நகராட்சியில் சுவர்ண ஜெயந்தி திட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது.
சுவர்ண ஜெயந்தி திட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. ஆணையாளர் ஆர்.சேகர் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஆர்.செல்வம் முன்னிலை வகித்தார். நகராட்சித் தலைவர் இரா.திருமகன் கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
நிகழ்ச்சியில் சுவர்ண ஜெயந்தி திட்டத்தின் கீழ், மகளிர் குழுக்கள், வறுமை கோட்டின் கீழ் உள்ள குடும்பங்கள் ஆகியவற்றுக்கு அரசு வழங்கும் திட்டப் பணிகள் குறித்து பல்வேறு துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
வேலைவாய்ப்புகள் குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சந்திரன், சமூக நலத்துறை திட்டங்கள் குறித்து எப்சிபாய், வங்கி கடனுதவி திட்டம் குறித்து இந்தியன் வங்கி மேலாளர் வெங்கடேஸ்வர குப்தா, பெண்களுக்கான சட்ட பாதுகாப்பு குறித்து இன்ஸ்பெக்டர் ராணி ஆகியோர் பேசினர்.
மேலும், மகளிர் குழு உறுப்பினர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர். கூட்டத்தில், நகராட்சி கவுன்சிலர்கள் கார்த்திவேல்மாறன், குட்டி க.புகழேந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.