தினத்தந்தி 13.08.2013
துடியலூர், கவுண்டம்பாளைத்தில் மாநகராட்சியின் அம்மா திட்ட முகாம் மேயர் செ.ம.வேலுசாமி தொடங்கி வைத்தார்
துடியலூர், கவுண்டம்பாளையத்தில் மாநகராட்சியின் அம்மா திட்ட முகாமை மேயர் செ.ம.வேலுசாமி தொடங்கி வைத்தார்.
மாநகராட்சியின் அம்மா திட்ட முகாம்
கோவையை அடுத்த துடியலூர்,
கவுண்டம்பாளையத்தில் கோவை மாநகராட்சியால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அம்மா
திட்ட முகாமின் தொடக்க விழா வார்டு அலுவலகத்தில் நடந்தது. விழாவுக்கு
மாநகராட்சி கவுன்சிலர் வக்கீல் ஆர்.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.
ஆணையாளர் லதா திட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கி பேசினார். முன்னதாக
முகாமை தொடங்கி வைத்து மேயர் சே.ம.வேலுசாமி பேசினார். அப்போது அவர்
பேசியதாவது:–
தமிழக முதல்–அமைச்சர்
ஆணைக்கிணங்க இந்த திட்டம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்து. இந்த
திட்டமானது நேரடியாக மக்களை சென்று அடைய கூடியது. இதன் மூலம் பொதுமக்கள்
தங்களது குறைகளை அவர்களே நேரடியாக அதிகாரிகளிடம் தெரிவித்து அப்போதே அதற்கு
தீர்வு காணமுடியும். அவ்வாறு தீர்வு காண முடியாத குறைகள் இருந்தால்
சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் இதுபற்றி பொதுமக்கள் கூறவேண்டும்.
4 நாட்கள் நடைபெறும்
இந்த முகாம்
கவுண்டம்பாளையம், துடியலூர் பகுதிகளில் தொடர்ந்து 4 நாட்கள் நடைபெறும்.
மற்ற வார்டுகளிலும் மாநகராட்சியின் அம்மா திட்ட முகாம் தொடர்ச்சியாக
நடைபெறும். பொதுமக்கள் இதனை உரிய முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.விழாவில் சேலஞ்சர் துரை எம்.எல்.ஏ, துணை மேயர்
லீலாவதி உண்ணி, மாநகராட்சி உறுப்பினர்கள் கே.எஸ்.மகேஸ்குமார், சின்னசாமி,
மாரிமுத்து, சரஸ்வதி கவிச்சந்திரமோகன், வனிதாமணி, வத்சலா, அன்னபூரணி
மற்றும் மாநகராட்சி துணை ஆணையர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.