தினமலர் 04.032010
துணை முதல்வருக்கு ‘பறந்தது‘ கடிதம் குடிநீர் பிரச்னையை தீர்க்க முறையீடு
திருப்பூர்:”பொதுமக்களின் தாகத்தை தணிக்க, 20 லட்சம் லிட்டர் குடிநீராவது கூடுதலாக வழங்க வேண்டும்‘ என, துணை முதல்வருக்கு, நல்லூர் நகராட்சி யில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டுள் ளது. கூடுதல் குடிநீர் கிடைத்தால் மட்டுமே 1.10 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள தொட்டிகள் பயன்பாட்டுக்கு வரும்.நல்லூர் நகராட்சி பகுதியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்நகராட்சிக்கு என தனியாக பராமரிக்கப்படும் குடிநீர் திட் டங்கள் இல்லை. இரண்டாவது கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இருந்து 4.16 லட்சம் லிட்டர் குடிநீர் பெறப்படுகிறது.குடிநீர் பற்றாக்குறை காரணமாக, புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டு கழகத்திடம், ஒப்பந்த விலையில் 2.058 மில்லியன் லிட்டர் குடிநீர் பெறப்படு கிறது. ஒரு நபருக்கு நாளொன்றுக்கு 90 லிட்டர் குடிநீர் வினியோகிக்க வேண் டும்; தற்போது 43 லிட்டரே வழங்கப் படுகிறது. ஒருவருக்கு 90 லிட்டர் வீதம் வழங்க, தற்போதைய மக்கள் தொகைக்கேற்ப, 43 லட்சம் லிட்டர் குடிநீர், சலுகை விலையில் அளிக்க கோரிக்கை வைக்கப் பட்டது.
சலுகை விலையில் கூடுதலாக குடிநீர் வினியோகிக்க இயலாது என, புதிய திருப்பூர் மேம்பாட்டு கழகம் கை விரித்து விட்டது.”கூடுதலாக 43 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க இயலாவிட்டால், குறைந்தபட்ச மாக, 20 லட்சம் லிட்டராவது உடனடி யாக வழங்க வேண்டும்; கூடுதலாக வழங்கப் படும் குடிநீருக்கு பேச்சு மூலம் அரசு நிர்ணயிக்கும் தொகை செலுத்தப் படும். அதுவரை, தற்போதைய சலுகை விலையில் குடிநீர் வழங்குங் கள்; வித்தியாச தொகையை அரசு கட்டணம் நிர் ணயித்ததும் செலுத்து கிறோம்‘ என்று புதிய திருப்பூர் மேம் பாட்டு கழகத்திடம் மீண்டும் வலியுறுத் தப்பட்டது; அங்கிருந்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இந்நிலையில், நல்லூர் நகராட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளை பட்டிய லிட்டு, துணை முதல்வர் ஸ்டாலினுக் கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் நகராட்சி தலைவி விஜயலட்சுமி கடிதம் எழுதியுள்ளார்.அதில், “நல்லூர் நகராட்சியில், தற்போது 12 நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் வழங்கப்படுகிறது; பற்றாக்குறை யால் பொதுமக்கள் அவதிப்படுகின்ற னர். ஏழாவது வார்டில் ரூ.1.10 கோடி மதிப்பில் ஐந்து லட்சம் லிட்டர் கொள்ள ளவு கொண்ட மேல்நிலைத்தொட்டி, கீழ்நிலைத் தொட்டி கட்டப்பட்டுள்ளது. குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, புதிதாக கட்டப்பட்டுள்ள தொட்டிகள் மூலம் குடிநீர் வினியோகிக்க, புதிய திருப்பூர் மேம்பாட்டு கழகம் கூடுதலாக குடிநீர் வழங்க உத்தரவிட வேண்டும்‘ என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.