தினமணி 29.10.2013
துண்டிக்கப்பட்ட குடிநீர் குழாய் இணைப்பு
தினமணி 29.10.2013
துண்டிக்கப்பட்ட குடிநீர் குழாய் இணைப்பு
செங்கல்பட்டு நகராட்சி
காந்தி சாலையில் ஒரு மாதமாக துண்டிக்கப்பட்டிருந்த பொது குடிநீர் குழாய்
இணைப்பு சனிக்கிழமை நகராட்சி ஆணையர் மேற்பார்வையில் மீண்டும்
கொடுக்கப்பட்டது.
செங்கல்பட்டு காந்தி சாலை, மேட்டுத் தெரு, வேதப்பர் தெரு, பஜார் தெரு
இணைப்பில் உள்ள நகராட்சி குடிநீர் குழாய் இணைப்பு நகர்மன்ற உறுப்பினர்கள்
தலையீட்டால் துண்டிக்கப்பட்டது. இதனால் அந்தக் குழாயை நம்பி இருந்த ஏழை
எளியமக்கள் மற்றும் சிறுவியாபாரிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
இது குறித்து தினமணி நாளிதழில் வெள்ளிக்கிழமை செய்தி
வெளியிடப்பட்டிருந்தது. இதை அறிந்த ஆட்சியர் பாஸ்கரன், அதே நாளில்
அப்பகுதிக்கு குடிநீர் குழாய் இணைப்பு தர நடவடிக்கை மேற்கொள்ளும்படி
செங்கல்பட்டு நகராட்சி ஆணையர் பாஸ்கருக்கு, உத்தரவிட்டார். இதையடுத்து
செங்கல்பட்டு நகராட்சி ஆணையர் பாஸ்கர் நேரடி பார்வையில் துண்டிக்கப்பட்ட
குழாய் இணைப்பை இளநிலைப் பொறியாளர் சாய்ராம், பிட்டர் ஆல்பர்ட், குழாய்
ஆய்வாளர் சிவலிங்கம், கவுன்சிலர் ஜி.சேட் ஆகியோர் சரிசெய்யப்பட்டு
குழாய்களும் புதிதாக மாற்றப்படடன.
குழாய்களில் தண்ணீர் வருவதை கண்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.