தினமணி 31.10.2013
துப்புரவுப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு பொருள் வழங்கல்
தினமணி 31.10.2013
துப்புரவுப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு பொருள் வழங்கல்
ரூ.1.77 லட்சம் மதிப்பிலான துப்புரவுப் பணி பாதுகாப்பு பொருள்கள் சிவகங்கை நகராட்சி பணியாளர்களுக்கு புதன்கிழமை வழங்கப்பட்டது.
சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் துப்புரவுப் பணியினை
மேற்கொண்டு வரும் பணியாளர்களின் சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில் தலா
ரூ.2,400 மதிப்பிலான சீருடை, பிரதிபலிபான் ஜாக்கெட், தலைகவசம், காலணி
(கம்பூட்), முககவசம், கையுறை உள்ளிட்ட 7 பொருள்களை நகராட்சியில் நடைபெற்ற
நிகழ்ச்சியில் 74 துப்புரவு பணியாளர்களிடம் நகர்மன்றத் தலைவர்
எம்.அர்ச்சுணன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற துணைத் தலைவர் கே.வி.சேகர், நகராட்சி ஆணையர்
(பொ) எஸ்.வரதராஜன், மேலாளர் ஆர்.ராஜராஜேஸ்வரி, துப்புரவு அலுவலர்
பி.ராஜமோகன், துப்புரவு ஆய்வாளர் பி.பாண்டிசெல்வம் ஆகியோர் கலந்து
கொண்டனர்.