தினமணி 15.04.2010
துப்புரவுப் பணியாளர்களுக்கான குடியிருப்பு கட்டும் பணி ஆய்வு
திருச்சி, ஏப். 14: திருச்சி மாநகராட்சி சார்பில் பூசாரித் தெருவில் ரூ. 2.50 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் துப்புரவுப் பணியாளர்களுக்கான குடியிருப்பு கட்டுமானப் பணியை ஆணையர் த.தி. பால்சாமி புதன்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்தக் குடியிருப்பில் ஒரு தொகுப்புக்கு 12 வீடுகள் வீதம் 3 தொகுப்புகள் கட்டப்படுகின்றன. தொடர்ந்து கீழரண் சாலையின் இருபுறங்களிலும் மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலங்கள் அமைக்கும் பணி உள்ளிட்டவற்றையும் ஆணையர் பால்சாமி பார்வையிட்டார். ஆய்வின் போது, நகரப் பொறியாளர் எஸ். ராஜா முகம்மது, செயற்பொறியாளர் எஸ். அருணாசலம், உதவிச் செயற்பொறியாளர் அமுதவள்ளி, இளநிலைப் பொறியாளர் மதிவாணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.