தினமணி 21.05.2013
துப்புரவுப் பணியாளர் நேர்முகத் தேர்வு
பண்ருட்டி நகராட்சியில் காலியாக உள்ள துப்புரவு, மின்னாளர், குழாய் பொருத்துனர் பணி இடங்களைப் பூர்த்தி செய்வதற்கான நேர்முகத் தேர்வு நகராட்சி வளாகத்தில் திங்கள்கிழமை நடந்தது.
காலியாக உள்ள பணியிடங்களை பூர்த்தி செய்ய, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதையடுத்து, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பணி நாடுனர் பட்டியல் பெறப்பட்டு, நகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. மொத்தமுள்ள 22 பணியிடங்களுக்கு 115 பேர் நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டனர். தேர்வை ஆணையர் (பொறுப்பு) ஆர்.ராதா நடத்தினார்.