தினமணி 10.11.2010
துப்புரவுப் பணி மேற்பார்வையாளர் பணியிடை நீக்கம்
திருச்சி, நவ. 8: திருச்சி மாநகராட்சி துப்புரவுப் பணி மேற்பார்வையாளரை பணியிடை நீக்கம் செய்து மாநகராட்சி ஆணையர் த.தி. பால்சாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
“திருச்சி மாநகராட்சி கோ. அபிஷேகபுரம் கோட்டத்தின் துப்புரவுப் பணி மேற்பார்வையாளர் கு. நாகராஜன்.
இவர் உயர் அலுவலர்களின் அறிவரைப்படி துப்புரவுப் பணியை மேற்கொள்ளவில்லை. பல முறை அதிகாரிகள் எச்சரித்தும் பணியில் அலட்சியமாக இருந்த காரணத்தால் நாகராஜன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
துப்புரவுப் பணி, துப்புரவு மேற்பார்வைப் பணியில் மெத்தனமாக இருக்கும் பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்றார் அவர்.